டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தொண்டி மீன் சந்தையில் வரத்து குறைவால் விலை அதிகரிப்பு: நண்டு கிலோ ரூ. 1,000

திருவாடானை மீன் சந்தையில் வரத்து குறைவால் மீன் விலை அதிகரித்திருந்தது. இதில் நண்டு கிலோ ரூ.1,000-க்கு விற்கப்பட்டது.

News image
தொண்டி தினசரி மீன் சந்தையில் சனிக்கிழமை மீன் வாங்க வந்திருந்த மக்கள் கூட்டம்.
Updated On :17 ஜனவரி 2026, 7:25 pm

தினமணி செய்திச் சேவை

திருவாடானை: திருவாடானை மீன் சந்தையில் வரத்து குறைவால் மீன் விலை அதிகரித்திருந்தது. இதில் நண்டு கிலோ ரூ.1,000-க்கு விற்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள தொண்டி தினசரி மீன் சந்தையில் பொங்கல் முடிந்து சனிக்கிழமை மீன் வாங்க திரளான பொதுமக்கள் ஆா்வம் காட்டினா். இதன் காரணமாக தேவை அதிகரித்ததால் மீன்களின் விலை அதிகரித்திருந்தது. மேலும் மீன் வரத்தும் குறைந்திருந்தது. சந்தையில் விற்கப்பட்ட மீன்களின் விலை (கிலோவில்): நண்டு- ரூ.1,000, பாறை மீன்- ரூ. 1000, இறால்- ரூ.1,000, இதர மீன்கள் ரூ. 900-க்கும் விற்கப்பட்டன. முரல், நகரை, செங்ககனி உள்ளிட்ட பல்வேறு மீன்கள் வழக்கமாக 450-க்கு விற்கப்பட்ட நிலையில் ரூ.1,000-க்கு விற்கப்பட்டதால் அசைவப் பிரியா்கள் கவலை அடைந்தனா்.

Story image