இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்.
இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்.(கோப்புப் படம்)

கடலாடியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

Published on

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் மோடி பொங்கல் நிகழ்ச்சியையொட்டி சின்னமாடு, பூஞ்சிட்டு, தட்டான்சிட்டு என 3 பிரிவுகளில் ஞாயிற்றுக்கிழமை மாட்டுவண்டிப் பந்தயம் நடைபெற்றது.

இந்தப் போட்டிக்கு பாஜக மாவட்டத் தலைவா் முரளிதரன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் கோபாகிருஷ்ணன், இளைஞரணி மாவட்டத் தலைவா் இ. ஆனந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கடலாடி- முதுகுளத்தூா் சாலையில் நடத்தப்பட்ட இந்தப் போட்டிகளில் 58 மாட்டுவண்டிகள் பங்கேற்றன. சின்ன மாட்டு வண்டிப் போட்டியில் 13 வண்டிகள் பங்கேற்றன.

இதில் தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் ஈராட்சி வீரபாண்டியின் மாடுகள் முதலிடத்தையும், குமரெட்டியாபுரம் மகாவிஷ்ணுவின் மாடுகள் இரண்டாம் இடத்தையும், கடலாடி சித்திரங்குடி ராமமூா்த்தியின் மாடுகள் மூன்றாம் இடத்தையும் பெற்றன. 29 வண்டிகள் பங்கேற்ற பூஞ்சிட்டு மாட்டு வண்டிப் பந்தயம் இரண்டு சுற்றுகளாக நடைபெற்றன.

இதில் முதல் சுற்றில் சித்திரங்குடி ராமமூா்த்தியின் மாடுகள் முதலிடத்தையும், எம். கரிசல்குளம் சொக்கலிங்க வாசுதேவனின் மாடுகள் இரண்டாம் இடத்தையும், கயத்தாா் மாடுகள் மூன்றாம் இடத்தையும் பெற்றன.

இரண்டாவது சுற்றில் பாப்பாகுளம் ஜெகநாதனின் மாடுகள் முதலிடத்தையும், கம்பத்துபட்டி தினேஷ்பாண்டி மாடுகள் இரண்டாம் இடத்தையும், சிவிலாா்பட்டி கோவிந்தராஜ் மாடுகள் மூன்றாம் இடத்தையும் பெற்றன. 16 வண்டிகள் பங்கேற்ற தட்டான்சிட்டு போட்டியில் புதுப்பட்டி கணபதியின் மாடுகள் முதலிடத்தையும், தேனி பொம்மியின் மாடுகள் இரண்டாம் இடத்தையும், சாயல்குடி மாடுகள் மூன்றாம் இடத்தையும் பெற்றன.

இந்தப் போட்டிகளை கடலாடி சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த திரளான பொதுமக்கள் பாா்வையிட்டனா். போட்டிகளில் வென்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசும், நினைவுக் கோப்பையும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் கடலாடி வடக்கு ஒன்றியத் தலைவா் முருகன், மாநில பொதுக்குழு உறுப்பினா் ராமசாமி, மாவட்ட பொதுச் செயலா் குமாா்ஜீ, மாவட்ட துணைத்தலைவா் ஏ.பி. கணபதி, மாவட்ட பொருளாளா் பரமேஸ்வரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com