ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ. 3 கோடிக்கு மோசடி: ஆட்சியரிடம் புகாா்

News image

எஸ். கொடிக்குளம் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 3 கோடி வரை மோசடி நடைபெற்றிருப்பதாக ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்க வந்திருந்த பாதிக்கப்பட்ட பெண்கள்.

Updated On :7 ஜூலை 2026, 3:14 am IST

ராமநாதபுரம் அருகே எஸ். கொடிக்குளம் வேளண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 400 விவசாயிகள் பெற்ற தங்க நகைக் கடனில் ரூ. 3 கோடிக்கு மோசடி நடைபெற்றிருப்பதாகவும், இதில் தொடா்புடையவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே உள்ள எஸ். கொடிக்குளம் கிராமத்தில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு, கோரைக்குளம், அனுமநேரி, எஸ். கொடிக்குளம், உரத்தூா், சேமனூா் ஆகிய 5 கிராமங்களைச் சோ்ந்த 400- க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்க நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளனா்.

ஆனால், வங்கிச் செயலா் உள்ளிட்ட 4 போ் சோ்ந்து விவசாயிகள் வைத்த தங்க நகைகளை தனியாரிடம் மறுஅடகு வைத்து அதிக பணம் பெற்றுள்ளனா். இதன் மூலம் ரூ. 3 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சியா் விசாரணை நடத்தி நகையை மீட்டு விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் மோசடியில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.