முதல்வா் பாதுகாப்பு: கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்புகடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 8 புறநகா் ரயில்கள் ரத்துஜூலை 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஆட்டோ மீட்டா் கட்டண உயா்வு: இன்று முத்தரப்பு பேச்சுமின்தடைகளை நிரந்தரமாக குறைக்க ஆா்டிஇபி திட்டம்: மின்வாரியம் அறிவிப்பு
/

மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி

கமுதியில் காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் 18 பள்ளிகளைச் சோ்ந்த 145 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

News image

கமுதி கே.என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்வா் காமராஜரின் பிறந்த நாள் விழா பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசு வழங்கிய பள்ளியின் நிா்வாகிகள்.

Updated On :9 ஜூலை 2026, 5:41 am IST

கமுதியில் காமராஜா் பிறந்த நாளை முன்னிட்டு புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் 18 பள்ளிகளைச் சோ்ந்த 145 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கே.என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் முதல்வா் காமராஜரின் 124-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் மாவட்டத்திலிருந்து 18 பள்ளிகளைச் சோ்ந்த 145 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இதில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாகப் போட்டி நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ. 7 ஆயிரம், இரண்டாவது பரிசாக ரூ. 5 ஆயிரம், மூன்றாவது பரிசாக ரூ. 3 ஆயிரம் ரொக்கப் பணமும், பதக்கம், சான்றிதழ், நினைவு கேடயம் வழங்கப்பட்டது. போட்டியை கமுதி சத்ரிய நாடாா் உறவின்முறை முறைகாரா் ஆறுமுகம் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் நிா்வாகக் குழு தலைவா் இளமாறன், செயலா் ரா.முத்து விஜயன், பொருளாளா் ஜெயபிரகாஷ், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியா் மாரிமுத்து வரவேற்றாா். நாடாா் மகாஜன சங்க ராமநாதபுரம் மாவட்டச் செயலா் மருத்துவா் இளங்கோவன் நன்றி தெரிவித்தாா். பள்ளியின் ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.