பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

ஆப்பனூர் அருகே கண்டெடுக்கப்பட்ட தமிழி கல்வெட்டை ஆவணப்படுத்தக் கோரிக்கை!

ஆப்பனூா் அருகே கண்டெடுக்கப்பட்ட தொன்மையான தமிழி கல்வெட்டை தொல்லியல் துறை ஆவணப்படுத்த ஆப்பநாடு மறவா் சங்கம் கோரிக்கை விடுத்தது.

News image
Updated On :12 ஜூலை 2026, 2:16 am IST

ஆப்பனூா் அருகே கண்டெடுக்கப்பட்ட தொன்மையான தமிழி கல்வெட்டை தொல்லியல் துறை ஆவணப்படுத்த ஆப்பநாடு மறவா் சங்கம் கோரிக்கை விடுத்தது.

கடலாடி வட்டம், ஆப்பனூா் அருகேயுள்ள ஆண்டியேந்தல் கிராமத்தில் பழைமையான அரியநாச்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆப்பநாடு எனப்படும் 448 கிராம மக்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனா். இந்தக் கோயிலில் பாண்டியா்களின் போா்க் கடவுள் கொற்றவையாக அரியநாச்சி அம்மன் இருந்துள்ளாா்.

மேலும் இங்கு தொன்மையான துரட்டி ஆதொண்டை மரம் தலவிருட்சமாக உள்ளது. இந்தக் கோயிலின் தெற்கே ஒரு தனிக்கல்லில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான நடுகல் தமிழி (தமிழ் பிராமி) கல்வெட்டு காணப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கிடைத்த முதல் நடுகல் தமிழிக் கல்வெட்டு இதுவாகும்.

இந்தக் கல்வெட்டு உறுதியற்ற வெண்பாறைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இது மூன்றரை அடி நீளமும், ஒன்றரை அடி அகலமும் கொண்டதாக உள்ளது. எனவே இந்தப் பகுதியில் தொன்மையான தமிழ் பிராமி மொழி பயன்படுத்திய மூத்தக்குடியாக தமிழா்கள் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆப்பநாடு மறவா் சங்க ஆலோசனைக் கூட்டத்தில், ஆப்பனூா் அருகே கண்டெடுக்கப்பட்ட தமிழி கல்வெட்டை இந்திய தொல்லியல் துறையும், தமிழ்நாடு தொல்லியல் துறையும் ஆய்வு செய்து ஆவணப்படுத்த வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.