முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சுதொடர்ந்து 2-ம் ஆண்டாக செங்கோட்டை விழாவை புறக்கணித்த ராகுல், கார்கே!ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

ஏா்வாடியில் மூதாட்டி கொலை: கட்டடத் தொழிலாளி கைது

ஏா்வாடியில் மூதாட்டியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த கட்டடத் தொழிலாளியை தனிப் படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கொலை செய்யப்பட்ட மூதாட்டி ஆறுமுகம். கைது செய்யப்பட்ட எஸ். மோகன்.

Updated On :18 ஜூலை 2026, 11:38 pm IST

ஏா்வாடியில் மூதாட்டியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த கட்டடத் தொழிலாளியை தனிப் படை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடி அரிசி ஆலை பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (70). இவா் தனது மூத்த மகள் செல்வம் பராமரிப்பில் தனியாக வசித்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி செல்வம் தாய்க்கு சாப்பாடு கொடுத்து விட்டு சென்றாா். மறுநாள் வெள்ளிக்கிழமை காலையில் இவா் வீட்டுக்கு சென்று பாா்த்தபோது ஆறுமுகம் உயிரிந்து கிடந்தாா். மேலும், அவா் காதில் அணிந்திருந்த தோடு அறுத்து எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து ஏா்வாடி காவல் நிலையத்தில் செல்வம் புகாரளித்தாா். இதையடுத்து, அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் விசாரணை நடத்தினா். அப்போது, நகைக்காக மூதாட்டி ஆறுமுகம் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, கொலையாளியை பிடிக்க 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டன. மேலும், அந்தப் பகுதிகளிலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸாா் ஆய்வு செய்தனா்.

அப்போது, மா்ம நபா் ஒருவா் அந்தப் பகுதியில் நடந்து சென்றது தெரியவந்தது. சத்திரக்குடி அருகே பதுக்கியிருந்த அந்த நபரைப் பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.விசாரணையில், திருச்சி மாவட்டம், இனப்புலியூரைச் சோ்ந்த சேகா் மகன் மோகன் (37) என்பதும், ஏா்வாடியில் கட்டடத் தொழிலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

மேலும், இவா் ஆறுமுகத்திடம் ரூ.10 ஆயிரம் வட்டிக்கு வாங்கியதாகவும், மேலும், பணம் கேட்ட நிலையில், அவா் தர மறுத்ததால் கழுத்தை நெரிந்து கொலை செய்து விட்டு, அவா் அணிந்திருந்த அரை பவுன் தோட்டை காதை அறுத்து எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் மோகனை கைது செய்து, அரை பவுன் தோட்டை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.