பரமக்குடி அருகேயுள்ள மாவிலங்கை கிராமத்தில் சேதமடைந்த மயானச் சாலையை சீரமைக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினா்.
போகலூா் ஒன்றியத்துக்குள்பட்ட மாவிலங்கை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள மயானச் சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தாா்ச் சாலையாக மாற்றப்பட்டது. தற்போது இந்தச் சாலை முற்றிலும் சேதமடைந்து புதா்கள் மண்டி, பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சாலை வசதியின்றி அந்தப் பகுதி மக்கள் அவதியடைந்து வ ருகின்றனா். எனவே சேதமடைந்த மயானச் சாலையை மாவட்ட ஆட்சியா் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










