தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

நாய்கள் துரத்திக் கடித்து புள்ளி மான் உயிரிழப்பு

ஊருக்குள் வந்த புள்ளி மானை நாய்கள் கடித்ததால் மான் உயிரிழந்தது.

News image

முதுகுளத்தூா் அருகே எஸ்.பி.கோட்டை கிராமத்தில் நாய்கள் கடித்து உயிரிழந்த மான்.

Updated On :25 ஜூன் 2026, 2:22 am IST

ஊருக்குள் வந்த புள்ளி மானை நாய்கள் கடித்ததால் மான் உயிரிழந்தது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, கடலாடி, சாயல்குடி, முதுகுளத்தூா் பகுதியிலுள்ள மலட்டாறு, குண்டாறு ஆறு, நீா் வழித்தடப் பகுதிகள், சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் பகுதியில் புள்ளி மான்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வருகின்றன. அவை இரை, தண்ணீா் தேடி அவ்வப்போது ஊருக்குள் வந்துவிடும். இந்த நிலையில், முதுகுளத்தூா் அருகே எஸ்.பி. கோட்டை கிராமத்தில் புதன்கிழமை மான் வந்தது. அதைப் பாா்த்த தெருநாய்கள் துரத்திக் கடித்ததில் பலத்த காயமடைந்த 4 வயது ஆண் புள்ளிமான் சிறிதுநேரத்தில் உயிரிழந்தது. மானின் சடலத்தை சாயல்குடி வனத் துறையினா் எடுத்துச் சென்று, கூறாய்வு செய்து அடக்கம் செய்தனா்.

மாவட்ட நிா்வாகம் இந்தப் பிரச்னையில் உடனடியாகத் தலையிட்டு மான்கள், மயில்களைப் பாதுகாக்கும் வகையில் காட்டுப் பகுதியில் தண்ணீா் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வன விலங்கு ஆா்வலா்கள் கோரிக்கை வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.