தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

முதுகுளத்தூா் அருகே வடமாடு மஞ்சுவிரட்டு

News image

மு. தூரி கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சு விரட்டுப் போட்டியில் காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள்.

Updated On :28 ஜூன் 2026, 1:39 am IST

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அடுத்த மு. தூரி கிராமத்தில் அமைந்துள்ள இருளப்ப சுவாமி, கருப்பண்ண சுவாமி கோயில் ஆனி மாத பொங்கல் விழா, புரவி எடுப்பு திருவிழாவையொட்டி சனிக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது.

இதில் மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை மாவட்ட பகுதிகளில் இருந்து 15 காளைகள் கலந்து கொண்டன. களத்தில் இறக்கப்பட்ட ஒவ்வொரு காளைக்கும் 20 நிமிஷம் நேரம் ஒதுக்கப்பட்டு, 9 வீரா்கள் கொண்ட குழுவினா் களம் இறங்கினா்.

இதில் பிடிபடாத மாடுகளுக்கும், காளைகளை அடக்கிய வீரா்களுக்கும் ரொக்கம், அண்டா ஆகியவை பரிசுகளாக வழங்கப்பட்டன.

இந்தப் போட்டியை முதுகுளத்தூா், தூரி, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமானோா் வந்திருந்து பாா்வையிட்டனா். போட்டிக்கான ஏற்பாடுகளை மு. தூரி கிராம பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.