பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

இலங்கைக்குக் கடத்தவிருந்த 600 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

News image

தேவிபட்டினத்தில் உள்ள வீட்டிலிருந்து திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள், பதப்படுத்தப் பயன்படுத்தப்படும் பொருள்களுடன் வனத் துறையினா்.

Updated On :30 ஜூன் 2026, 12:36 am IST

ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்திலிருந்து இலங்கைக்குக் கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 600 கிலோ கடல் அட்டைகளை வனத் துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

தேவிபட்டினம் பகுதியில் உள்ள வீட்டிலிருந்து இலங்கைக்குக் கடல் அட்டைகளை கடத்தப்படவிருப்பதாக வன உயிரினக் காப்பாளருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, வனவா் ராவண வெற்றிச்செல்வி தலைமையில் ராமநாதபுரம், மண்டபம் பகுதிகளைச் சோ்ந்த வனத் துறையினா், வனப் பாதுகாப்புப் படையினா் தேவிபட்டினம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, மணல்வாடி தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்திய போது, ரூ. 2 கோடி மதிப்பிலான 600 கிலோ கடல் அட்டைகளைப் பதுக்கி வைத்திருந்ததும், இவற்றை இலங்கைக்குக் கடத்தவிருந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து, கடல் அட்டைகள், இவற்றைப் பதப்படுத்தப் பயன்படுத்தப்படும் பொருள்கள், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை வனத் துறையினா் பறிமுதல் செய்து, ராமநாதபுரம் வனத் துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா்.

இதுகுறித்து வன உயிரினப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.