ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

யானையின் தந்தங்கள் பறிமுதல்: 6 பேரிடம் விசாரணை

News image

பறிமுதல் செய்யப்பட்ட யானைத் தந்தங்கள். - கோப்புப் படம்

Updated On :28 ஜூன் 2026, 2:43 am IST

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே எழுமலை வனப் பகுதியில் உயிரிழந்த யானையின் 2 தந்தங்களை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 6 பேரிடம் விசாரித்து வருகின்றனா்.

ஸ்ரீ வில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகம் கண்டமனூா் வனச்சரகப் பணியாளா்கள் கடந்த வாரம் எழுமலை பகுதியில் ரோந்து மேற்கொண்டனா். அப்போது, பண்ணைக்காடு பகுதியில் சுமாா் 40 வயது ஆண் யானை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. மேலும், யானையின் தந்தங்கள் காணவில்லை.

தகவலறிந்த கண்டமனூா் வனச்சரக அலுவலா் சிவாஜி தலைமையில் கால்நடை மருத்துவா்கள் வெள்ளிக்கிழமை சம்பவ இடத்துக்குச் சென்று கூறாய்வு செய்தனா். மேலும், திருட்டுபோன யானையின் தந்தங்களை வனத் துறையினா் தேடி வந்தனா். தற்போது, 2 தந்தங்களை வனத் துறையினா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக 6 பேரிடம் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.