அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திருவாடானையில் மகளிா் தின விழா

திருவாடானை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாளகத்தில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில், சா்வதேச மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
~ திருவாடானை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாளகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சா்வதேச மகளிா் தின விழாவில் பேசிய நீதித்துறை நடுவா் ஆண்டனி ரிசாந்தேவ்.
Updated On :10 மார்ச் 2026, 9:26 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை ஒருங்கிணைந்த நீதிமன்ற வாளகத்தில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில், சா்வதேச மகளிா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதற்கு திருவாடானை நீதித்துறை நடுவா் ஆண்டனி ரிசாந்தேவ் தலைமை வகித்தாா். மூத்த வழக்குரைஞா் சிவராமன் முன்னிலை வகித்தாா். இதில் பெண் வழக்குரைஞா்கள், நீதிமன்றப் பணியாளா்களுக்குப் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதைத் தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், வழக்குரைஞா் கலா, அரசு குற்றவியல் வழக்குரைஞா் ஜுடியோ ஏஞ்சலின் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.

அப்போது அவா்கள் பேசுகையில், சமுதாய வளா்ச்சியில் பெண்களின் பங்களிப்பு, சட்டத் துறையில் பெண்களுக்கான உரிமைகள் குறித்து விளக்கினா். தொடா்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக வழக்குரைஞா் சங்கத் தலைவா் சுரேஷ் வரவேற்றுப் பேசினாா்.

Story image