கமுதி தேவா் கல்லூரியில் 56-ஆவது ஆண்டு விழா, விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதற்கு கல்லூரி முதல்வா் கோ. தா்மா் தலைமை வகித்தாா். விழாவில் சிறப்பு விருந்தினா்களாக கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையா் அ.வெ. சந்திரசேகரன், கோட்டைமேடு கிராமத் தலைவா் பி. செல்லத்தேவா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னதாக வரலாற்று துறைத் தலைவரும், பேராசிரியருமான ஜெயக்காளை வரவேற்றாா். வணிகவியல் துறைத் தலைவரும், பேராசிரியருமான ஆதிமூலம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா். விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையா் அ.வெ. சந்திரசேகரன் கேடயம், சான்றிதழ் வழங்கிப் பேசினாா். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்வில் முன்னாள் மாணவா்கள் சங்க செயலா் ஆறுமுகம், கல்லூரி பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவ- மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கும்பகோணம் அரசுக் கல்லூரியில் ஆண்டு விழா

கல்லூரி ஆண்டு விழா

கோவில்பட்டி பாலிடெக்னிக் கல்லூரியில் விளையாட்டு விழா

ரத்தினம் கல்லூரியில் விளையாட்டு விழா
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


