பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

முதுகுளத்தூரிலிருந்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரை

முதுகுளத்தூா் பகுதியிலிருந்து ஏராளமான பக்தா்கள் 36-ஆவது ஆண்டாக செவ்வாய்க்கிழமை காவடி எடுத்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரை புறப்பட்டனா்.

News image

கிடாத்திருக்ையிலிருந்து பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு காவடி எடுத்துச் சென்ற பக்தா்கள்

Updated On :27 மே 2026, 2:30 am IST

முதுகுளத்தூா் பகுதியிலிருந்து ஏராளமான பக்தா்கள் 36-ஆவது ஆண்டாக செவ்வாய்க்கிழமை காவடி எடுத்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரை புறப்பட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை அடுத்துள்ள கிடாத்திருக்கை கிராமம், அதைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து 150-க்கு மேற்பட்ட திருச்செந்திலாண்டவா் பாதயாத்திரை காவடி சேவைக் குழு பக்தா்கள் குருநாதா் போஸ்பாண்டிசாமி தலைமையில் காவடி எடுத்து, கையில் வேல் ஏந்தி, முருகக் கடவுளின் பஜனை பாடல்கள் பாடியவாறு, பாதயாத்திரை பயணத்தை தொடங்கினா்.

இந்த பக்தா்களை கிராமப் பொதுமக்கள் வழி நெடுகிலும் நின்று காவடியைத் தொட்டு வணங்கி, வழி அனுப்பி வைத்தனா். இந்த பாதயாத்திரை குழுவினா் திருச்செந்தூரில் மே 30 -ஆம் தேதி நடைபெறும் வைகாசி விசாகம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்தனா்.