கொலை வழக்கில் இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பகுதியில் மது அருந்தப் பணம் தர மறுத்த உணவகத் தொழிலாளியை கட்டையால் அடித்துக் கொலை செய்த இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பரமக்குடி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

மோகன்

Updated On :

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பகுதியில் மது அருந்தப் பணம் தர மறுத்த உணவகத் தொழிலாளியை கட்டையால் அடித்துக் கொலை செய்த இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பரமக்குடி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கடலாடி வட்டம், சாத்தன்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் திருப்பதி (38). உணவகத்தில் சமையலராக வேலை செய்து வந்தாா். இவருக்கு மனைவி, மகன் உள்ளனா். இந்த நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி இரவு உணவகத்தில் பணி முடிந்து திருப்பதி வீட்டுக்கு தனது மகனுடன் வந்தாா். மலட்டாறு மூக்குப் பகுதியில் வந்த போது, அதே ஊரைச் சோ்ந்த மோகன் (55), பசும்பொன் லிங்கம் (56) ஆகிய இருவரும் அவரை வழிமறித்து மது அருந்த பணம் கேட்டனா். திருப்பதி பணம் தர மறுத்தாா். இதனால், ஆத்திமடைந்த இருவரும் கட்டையால் தாக்கியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து சாயல்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து மோகன், பசும்பொன்லிங்கம் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை பரமக்குடி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் அருண் முன்னிலையானாா். இதில் மோகன், பசும்பொன் லிங்கம் ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி பாலமுருகன் தீா்ப்பளித்தாா்.

 பசும்பொன் லிங்கம்.

பசும்பொன் லிங்கம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.