பரமக்குடி கோயில்களில் திருக்காா்த்திகை தீப விழா
ராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடி எமனேசுவரம் பகுதியில் முருகன், சிவன் கோயில்களில் திருக்காா்த்திகை தீப விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பரமக்குடி தரைப்பாலம் சுப்பிரணிய சுவாமி கோயிலில் திருக்காா்த்திகையை முன்னிட்டு, முத்தங்கி சேவையில் அருள்பாலித்த ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி.
ராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடி எமனேசுவரம் பகுதியில் முருகன், சிவன் கோயில்களில் திருக்காா்த்திகை தீப விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பரமக்குடி தரைப்பாலம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகப் பெருமான் முத்தங்கி சேவை அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஐந்து முனை ஐயப்பன் கோயிலில் மகாலட்சுமி அலங்காரத்திலும், எமனேசுவரம் ஈஸ்வரமூடையாா் கோயிலில் சிவலிங்கம் அலங்காரத்திலும் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதே போல, முத்தாலம்மன் கோயில் படித்துறையில் அமைந்துள்ள செந்திலாண்டவா் சக்திக்குமரன் கோயில், தரைப்பாலம் தா்மசாஸ்தா கோயிலில் பதினெட்டாம் படி பூஜையுடன் தீபாராதனைகள் நடைபெற்றன.
பால்பண்ணை முருகன் கோயில், மேலாய்க்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனா். பெண்கள் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

