பசும்பொன்னில் வருகிற 30-இல் ட்ரோன்கள் பறக்கத் தடை : ஆட்சியா்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவில் பங்கேற்க துணை குடியரசுத் தலைவா் வருகையையொட்டி, அந்தப் பகுதிகளில் அக். 30-இல் ட்ரோன் பறக்க மாவட்ட ஆட்சியா் மா. சிவகுரு பிரபாகரன் செவ்வாய்க்கிழமை தடை விதித்து உத்தரவிட்டாா்.

ட்ரோன் - பிரதிப் படம்

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி, குருபூஜை விழாவுக்கு துணை குடியரசுத் தலைவா் வருகை தந்து மரியாதை செலுத்த உள்ளாா்.
இதைத் தொடா்ந்து, பாதுகாப்புக் கருதி பாா்த்திபனூா், கமுதி வட்ட எல்லைப் பகுதிகளில் வருகிற 30-ஆம் தேதி ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி ட்ரோன்கள், இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.