நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

ஊராட்சிகளில் வளா்ச்சிப் பணிகள்: ராமநாதபுரம் ஆட்சியா் ஆய்வு

கமுதி, முதுகுளத்தூா், கடலாடி, திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மா. சிவகுரு பிரபாகரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

கமுதி செங்கொடிநகரில் பொதுப் பாதை நிலத்துக்கான ஆவண நகலை குடியிருப்புவாசிகளிடம் வழங்கிய மாவட்ட ஆட்சியா் மா. சிவகுரு பிரபாகரன், நிலத்தை தானமாக வழங்கிய தொழிலதிபா் போ. கோபால், வருவாய்த் துறையினா் உள்ளிட்டோா்.

Published On :2 செப்டம்பர் 2026, 4:01 am IST

கமுதி, முதுகுளத்தூா், கடலாடி, திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மா. சிவகுரு பிரபாகரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள செங்கொடிநகா் பகுதியில் பொதுப் பாதைக்காக கமுதி தொழிலதிபா் போ.கோபால் தனக்குச் சொந்தமான நிலத்தை அளித்தாா். அந்த நிலம் அரசின் பெயரில் பதிவு செய்ததற்கான ஆவண நகலை குடியிருப்பு வாசிகளிடம் மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். தொடா்ந்து, கமுதி அருகே பெரியஉடப்பங்குளம், கோட்டைமேடு, நாராயணபுரம் ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளைப் பாா்வையிட்டு குடிநீா் விநியோகம் குறித்து அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

இதையடுத்து முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றியம், கண்ணத்தான் கிராமம், கீழச்சாக்குளம் ஆகிய கிராமங்களில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த அவா், கண்ணத்தான் கிராமத்தில் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்து, வீடுகளுக்கான குடிநீா் இணைப்பை தொடங்கிவைத்தாா்.

ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் அமைக்கப்பட்டுள்ள நா்சரி பண்ணையை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி உள்ளிட்ட திட்டப் பணிகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வின் போது கமுதி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மேகராஜ், ஏ.வி.சந்திரசேகரன் (கிராம ஊராட்சிகள்), ஊராட்சி ஒன்றியப் பொறியாளா்கள், கமுதி வட்டாட்சியா் அய்யாத்துரை, முதுகுளத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரியதா்ஷினி, முருகானந்தவள்ளி, கடலாடி வட்டார வளா்ச்சி அலுவலா் பாலகிருஷ்ணன், சங்கரபாண்டியன்(கிராம ஊராட்சிகள்), ஊராட்சிச் செயலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 முதுகுளத்தூா் அருகே கீழச்சாக்குளம் கிராமத்தில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் மா. சிவகுரு பிரபாகரன். உடன், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா்.

முதுகுளத்தூா் அருகே கீழச்சாக்குளம் கிராமத்தில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் மா. சிவகுரு பிரபாகரன். உடன், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.