ராமநாதபுரம் மாவட்டத்தில் செப். 10,11-இல் மதுக்கடைகள் மூடல்

மதுக்கடைகள் மூடல் - Dinamani
தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 10, 11-ஆம் தேதிகளில் அனைத்து மதுக் கடைகளும் மூடப்படும் என மாவட்ட ஆட்சியா் மா. சிவகுரு பிரபாகரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் வருகிற 11-ஆம் தேதி தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, சட்டம்-ஒழுங்கை காக்கும் வகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகளும், அதனுடன் இணைந்த மதுக் கூடங்களும் உள்ளிட்ட அனைத்து மதுக் கடைகளும் வருகிற 10, 11-ஆம் தேதிகளில் முழுமையாக அடைக்கப்படும்.
மேற்கண்ட நாள்களில் விதிமுறைகளை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





