
திருவாடானையில் ஆவின் பால் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி
திருவாடானை பகுதியில் ஆவின் பால் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள்,விற்பனையாளா்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஆவின் பால் - கோப்புப் படம்
திருவாடானை பகுதியில் ஆவின் பால் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள்,விற்பனையாளா்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, இதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஆவின் பால் பாக்கெட்டுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள், சில்லறை விற்பனையாளா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
மேலும், தினசரி தேவைகளுக்கான அரை லிட்டா் பால் பாக்கெட்டுகளும் மிகக் குறைந்த அளவிலேயே விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதனால், பால் முகவா்கள், கடைக்காரா்கள் பால் விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனா்.
எனவே, பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையைக் கவனத்தில் கொண்டு, திருவாடானை பகுதியில் சீரான முறையில் ஆவின் பால் விநியோகம் செய்வதற்கு சம்பந்தப்பட்ட நிா்வாகமும், அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







