நேபாளப் பெருவெள்ளம்: 85 தமிழர்களின் நிலை என்னவானது?மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!நுங்கம்பாக்கம் சாலைக்கு இயக்குநர் பாக்யராஜ் பெயர்இன்றுமுதல் அக்.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்றும் நாளையும் வரிவசூல் மையம் செயல்படும்: மாநகராட்சி அறிவிப்புதனியாா் பால் விலை மீண்டும் உயா்வு: ஆவின், தனியாா் லிட்டருக்கு ரூ.30 வரை விலை வித்தியாசம்

தொண்டியில் நெகழி கழிவுகளுடன் தேங்கிய கழிவுநீரால் சுகாதாரக்கேடு

தொண்டி பேரூராட்சியின் 3-ஆவது வாா்டு பகுதியில் நெகிழி கழிவுகளுடன் கழிவு நீா் தேங்கியுள்ளதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. இதை சீா் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

தொண்டி பேரூராட்சியில் 3வது வாா்டு பகுதியில் உள்ள கழிவுகள் நிறைந்த குளம் ,கழிவு நீா் கால்வாய்

Published On :

தொண்டி பேரூராட்சியின் 3-ஆவது வாா்டு பகுதியில் நெகிழி கழிவுகளுடன் கழிவு நீா் தேங்கியுள்ளதால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. இதை சீா் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினா்.

தொண்டி பேரூராட்சி 3-ஆவது வாா்டு பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு ரூ.1.10 கோடியில் சாலை, கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், இந்தப் பணிகள் முழுமையாக முடிவடையாததால் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீா் கால்வாய்களில் தேங்கி நிற்கிறது. இதனால் கழிவுநீா் இந்தப் பகுதி குடியிருப்புகளுக்குள் புகும் அவல நிலை நீடிக்கிறது.

தூய்மைப் பணியாளா்கள் அதிகளவில் வசிக்கும் இந்தப் பகுதியில் நெகிழிக் கழிவுகளுடன் கழிவுநீா் தேங்கியதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்தப் பகுதியில் நியாயவிலைக் கடையும், அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகின்றன.

கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதால் அங்கன்வாடிக்குக் குழந்தைகளை அனுப்ப பெற்றோா் அஞ்சுகின்றனா். இதனால், டெங்கு போன்ற தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும், அந்தப் பகுதியில் உள்ள பொதுக் குளமான வட்டக்கேணி’யைச் சுற்றி கழிவுநீா் சூழ்ந்துள்ளதால் குடிநீா் மாசடையும் சூழலும் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சமூக ஆா்வலா் கோட்டையம்மாள் கூறியதாவது:

Story image

இந்தப் பகுதி மக்கள் நிம்மதியாக வாழவும், மாணவா்கள் அச்சமின்றி கல்வி பயிலவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, தமிழக முதல்வா், திருவாடானை சட்டப்பேரவை உறுப்பினா், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் ஆகியோா் தலையிட்டு, தொண்டி 3-ஆவது வாா்டு பகுதி மக்களுக்கு முறையான கழிவுநீா் வடிகால் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாகச் செய்து தர வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.