தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

பெண் அஞ்சல் ஊழியரிடம் நகை பறிப்பு: திருப்பத்தூரில் பரபரப்பு

திருப்பத்தூரில் அஞ்சல் அலுவலகத்தில் புதன்கிழமையன்று சேமிப்பு கணக்கு துவங்குவதாக கூறிய இளைஞர், பெண் ஊழியர் கழுத்தில் இருந்த 9 பவுன் தங்க

Updated On :5 ஏப்ரல் 2018, 8:32 am IST

திருப்பத்தூரில் அஞ்சல் அலுவலகத்தில் புதன்கிழமையன்று சேமிப்பு கணக்கு துவங்குவதாக கூறிய இளைஞர், பெண் ஊழியர் கழுத்தில் இருந்த 9 பவுன் தங்க சங்கிலிகளை பறித்துக்கொண்டு ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
   திருப்பத்தூர் அருகே முறையூரைச் சேர்ந்தவர் நாச்சியப்பன் மனைவி வளர்மதி(41). இவர் திருப்புத்தூர் சுவிடிஷ் மிஷன் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அஞ்சலக கிளை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் புதன்கிழமை பணியில் இருந்த போது, மதியம் சுமார் 1 மணியளவில் ஒரு இளைஞர் அலுவலகத்திற்கு வந்து புதிய சேமிப்பு கணக்கு துவங்க வேண்டும் என்று விபரம் கேட்டுள்ளார். 
    அப்போது திடீரென அந்த இளைஞர், வளர்மதி அணிந்திருந்த  7 பவுன் தாலி செயின் மற்றும் ஒன்றரை பவுன் டாலர் செயின் இரண்டையும் பறித்துள்ளார். வளர்மதி கையால் சங்கிலியை பிடித்து அந்த இளைஞருடன் போராடியுள்ளார். இதில் கையில் கிடைத்த பாதி சங்கிலியை பறித்துக் கொண்டு, கையில் மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை வளர்மதியின் முகத்தில் தூவிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். 
   இதுகுறித்து வளர்மதி கொடுத்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த திருப்பத்தூர் காவல் ஆய்வாளர் கீதா உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தினர்.  அதே பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் மனைவி கலைவாணி (27), பிள்ளையார்பட்டியைச் சேர்ந்த செல்லக்கண்ணு மகன் வடிவேலு(27) இருவரும் சங்கிலி பறிப்பில் சம்மந்தப்பட்டிருப்பதாக தெரியவந்ததையடுத்து திருப்பத்தூர்  நகர் போலீசார் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  செவ்வாய்கிழமையன்று ஓய்வு பெற்ற ஆசிரியையிடம் இதேபோன்று 4 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.