டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து காங். ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து சிவகங்கையில் காங்கிரஸ் மகளிர் பிரிவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :18 ஏப்ரல் 2018, 8:26 am IST

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து சிவகங்கையில் காங்கிரஸ் மகளிர் பிரிவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மகளிர் காங்கிரஸ் மாநிலப் பொதுச் செயலர் ஸ்ரீவித்யா கணபதி தலைமை வகித்தார். கட்சியின் சிவகங்கை மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார்.  
இதில்,பாஜக ஆட்சியில் நாட்டில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாததைக் கண்டித்தும்,பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிக்களுக்கு தக்க தண்டனை வழங்க தவறும் மத்திய,மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்களை  எழுப்பினர்.
 ஆர்ப்பாட்டத்தில்,முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சுந்தரம்,அருணகிரி, மாவட்டத் துனைத் தலைவர் சண்முகராஜன்,முன்னாள் மாவட்டத் தலைவர் ராஜரெத்தினம்,சிவகங்கை நகர் தலைவர் பிரபாகரன்,வட்டார  தலைவர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.