மானாமதுரை நகர் குடிநீர் திட்டம் அருகேயுள்ள ராஜகம்பீரம் வைகையாற்றுக்குள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ராஜகம்பீரம் பகுதியில் கடந்த சில நாள்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. சிப்காட் துணை மின் நிலையத்திலிருந்து விநியோகம் செய்யப்படும் மின்சாரம் பல கிராமங்களை கடந்து வரும் வழியில் மின் கம்பிகளை மரங்கள் உரசியவாறு வளர்ந்து நிற்கின்றன.
இதனால் காற்று வீசும்போது ராஜகம்பீரம் பகுதியில் மின்தடை ஏற்படும் நிலை தொடர்கிறது. இதன் காரணமாக குடிநீர் திட்டங்களில்
மோட்டாரை இயக்க முடியாமல் மேல்நிலைத்தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்ற முடியவில்லை. இதனால் மானாமதுரை நகரில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது, என குடிநீர் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். பொதுமக்கள் பணம் கொடுத்து குடிநீர் வாங்கி பயன்படுத்துகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








