கோயில் நிலங்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்தார்.
காரைக்குடியில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக அரசு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு வேண்டாம் என்று கொள்கை முடிவு எடுத்தால் தமிழக இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களையும் மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். கோயில் நிலங்களை மீட்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு செயல்படுத்தவில்லை என்றால் சென்னையில் இம்மாத இறுதியிலும் வரும் டிசம்பர் மாதத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்கள் முன்பாகவும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்.
இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டதைக் கண்டு தமிழக அரசு அதிர்ச்சியடைந்துள்ளது. கவிதா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. அது போன்ற கூட்டம் நடத்தும் அதிகாரிகளை தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்யவேண்டும். தமிழகத்தில் ரூ. 300 கோடி அளவிற்கு சிலைகள் மாற்றப்பட்டிருப்பதாக ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறியுள்ளார். பழனி கோயில் மூலவர் சிலைக்கு முன்பாக வைக்கப்பட் டிருக்கும் ஐம்பொன் சிலையிலும் தங்கம் இல்லை என்று கூறப்படுகிறது. தமிழக இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான அனைத்துக் கோயில்களிலும் சிலைகள் கடத்தல், உண்டியல் திருட்டு நடந்துள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளிவரும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








