சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

திருப்பத்தூரில் ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க மாநாடு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஆக.17,18,19 ஆகிய 3 தினங்கள் ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க 62 ஆம் ஆண்டு மாநாடு நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 10:02 pm IST

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஆக.17,18,19 ஆகிய 3 தினங்கள் ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க 62 ஆம் ஆண்டு மாநாடு நடைபெற்றது.
திருப்பத்தூரில் ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சார்பில் பொது மாநாடு வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 தினங்கள் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை சார்பாளர்கள் மாநாடு மற்றும் தோழர் என்.எம்.எஸ். படத்தை பொதுச் செயலாளர் சந்திரசேகரன் திறந்து வைத்தார், துணைத் தலைவர் புண்ணியமூர்த்தி உரையாற்றினார். சனிக்கிழமை சார்பாளர்கள் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. மாநாட்டின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை அண்ணாசிலையிலிருந்து பொதுத் துறை பாதுகாப்புப் பேரணி மாநாடு நடைபெற்ற ஆர்.கே.மகால் வரை நடைபெற்றது. 
இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊழியர் சங்கத் தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் புண்ணியமூர்த்தி, பொதுச் செயலாளர் முத்துக்குமாரசாமி, முதல் நிலை அதிகாரிகள் சங்க பொதுச் செயலாளர் பாண்டியன், தென்மண்டலத் தலைவர் சேதுராம், பொது ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 
இதில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க இணைச் செயலாளர் கிரிஜா ஆகியோர் சிறப்புரையாற்றினார். இதில் அடிகளார் பேசும் போது, நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க நீர்வழிச்சாலை தேசியமயமாக்க வேண்டும். தேசம் தந்த செல்வத்தை உள்வாங்கும் இளைஞர்கள் எழ வேண்டும். 5 ஆண்டுத் திட்டங்களுக்கான வளர்ச்சிப் பணிக்கு ஆயுள் காப்பீட்டுக் கழக பங்களிப்பு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார். 
மேலும் இம்மாநாட்டில் பொது காப்பீட்டை ஒன்றிணைக்க வேண்டும். எல்.ஐ.சி.யில் உடனடியாகப் பணி நியமனம் செய்யப்பட வேண்டும், அரசு பங்கு விற்பனை மற்றும் தனியார்மயமாக்குதல் எதிர்ப்பு, பாலியல் வன்முறை தடுக்கப்பட வேண்டும், விலைவாசி உயர்வு கட்டுப்படுத்துதல், விவசாயின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மதுரைக் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கப் பொதுச் செயலாளர் என்.பி.ரமேஷ்கண்ணன் நன்றி கூறினார். இம்மாநாட்டில் மதுரைக் கோட்டத்திற்குட்பட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.