தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

காணாமல்போனவர் 3 நாள்களுக்குப் பிறகு பாழடைந்த கிணற்றிலிருந்து மீட்பு

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே  பிளாமர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துமணி (32).

Updated On :23 ஜனவரி 2019, 8:18 am IST

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே  பிளாமர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துமணி (32). இவர் மது பழக்கத்துக்கு அடிமையானதால், 6 மாதங்களுக்கு முன்பு இவரது மனைவி தனது தந்தை வீட்டுக்கு மகனுடன் சென்றுவிட்டாராம்.
      மனைவி, மகன் பிரிந்து சென்றதால் முத்துமணி மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், 3 நாள்களுக்கு முன் வீட்டை விட்டுச் சென்றவர், செவ்வாய்க்கிழமை முருகப்பா பள்ளி  அருகேயுள்ள பாழடைந்த வறண்ட கிணற்றில் இருப்பதாக, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக, போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று, முத்துமணியை உயிருடன் மீட்டு,  சிவகங்கை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.