நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சிவகங்கை மாவட்ட விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள சிவகங்கை

Updated On :24 ஜனவரி 2019, 12:49 am IST

விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு நல அலுவலர் க.பிரபு புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் ஓய்வூதிய உதவித் தொகையாக வழங்க தமிழக அரச அரசாணை பிறப்பித்துள்ளது. 
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர்கள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். மத்திய அரசால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கிடையேயான போட்டிகள், அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.
2018 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியில் 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மேற்கண்ட தகுதிகள் கொண்ட சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள்  w‌w‌w.‌s‌d​a‌t.‌t‌n.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் மத்திய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் பெறுவோர் அல்லது மத்திய, மாநில அரசின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர், முதியோருக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற இயலாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.