15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

திமுக தகவல் தொழில்நுட்ப அணி பயிற்சிக் கூட்டம்

திருப்பத்தூரில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி தென்மண்டல அளவிலான பயிற்சி கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

Updated On :23 ஜனவரி 2019, 8:19 am IST

திருப்பத்தூரில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி தென்மண்டல அளவிலான பயிற்சி கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
திருப்பத்தூர் பாத்திமா அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளரும் திருப்பத்தூர் எம்எல்ஏவுமான கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை வகித்து பேசினார். தென்மண்டல மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.சுப்பிரமணி முன்னிலை வகித்தார். இதில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் வடக்கு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் கட்சியின்  கொள்கை, தலைமையின் கருத்துகள், தற்போது நடைபெற்று வரும் கிராம ஊராட்சி சபை போன்றவை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் இலக்குவன் உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக பசும்பொன்பாலா, வைகை ஹரிஹரசுதன் ஆகியோர் செயல்பட்டனர். மாவட்ட கழக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். திருப்பத்தூர் தொகுதி ஒருங்கிணைப்பாளர் எம்.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.