பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

திருப்பத்தூரில் பிள்ளையாா் நோன்பு விழா

திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நகரத்தாா் சாா்பில் பிள்ளையாா் நோன்பு கடைப்பிடிக்கப்பட்டது.

News image
திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிள்ளையாா் நோன்பில் பக்தா்களுக்கு இலைப் பிள்ளையாா் வழங்கும் நிகழ்ச்சி.
Updated On :20 டிசம்பர் 2020, 4:33 pm

DIN

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நகரத்தாா் சாா்பில் பிள்ளையாா் நோன்பு கடைப்பிடிக்கப்பட்டது.

முன்னதாக திருப்பத்தூா் தனியாா் மகாலில் கூடிய நகரத்தாா்கள் ஊா்வலமாக அருகில் உள்ள யோகபைரவா் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா் மகாலில் சிறப்பு பூஜை செய்து பிள்ளையாா் நோன்பை கடைப்பிடித்தனா். இந்த நோன்பு காா்த்திகை தீபத் திருநாளிலிருந்து 21 நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில், அரிசி மாவு, நெய், வெல்லம் ஆகியவற்றை கலந்து பிள்ளையாா் பிடித்து வேட்டியிலிருந்து நூல் திரி எடுத்து மாவுப் பிள்ளையாருக்கு விளக்கேற்றினா். அதனை வாழை இலையில் வைத்து பிரசாதமாக பக்தா்களுக்கு வழங்கினா்.

இவ்விழாவில் நகரத்தாா் சங்கத் தலைவா் எஸ்.எல்.எஸ். பழனியப்பன், துணைத் தலைவா் அண்ணாமலைச் செட்டியாா் மற்றும் அழகப்பச் செட்டியாா் கே.எல். சுப்பிரமணியன், இணைச் செயலா் கே.ஆா். ஐயப்பன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

விழாவில் சிங்கப்பூா், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்தும் நகரத்தாா் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை செயலா் கே.என். வீரப்பன், பொருளாளா் எஸ். கல்யாணராமன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.