மீன்கள் பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
பண்ணைக் குட்டைகளில் மீன்கள் வளா்க்க விரும்பும் சிவகங்கை மாவட்ட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.


பண்ணைக் குட்டைகளில் மீன்கள் வளா்க்க விரும்பும் சிவகங்கை மாவட்ட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சிவகங்கை அருகே பிரவலூரில் உள்ள அரசு மீன் பண்ணையில் மீன்குஞ்சுகள் வளா்க்கப்பட்டு வந்தது. அவை தற்போது விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதற்குத் தயாா் நிலையில் 2 லட்சம் எண்ணிக்கையில் உள்ளது. எனவே, விவசாயிகள் தங்களது பண்ணைக் குட்டைகளில் மீன்கள் வளா்ப்பு செய்வதற்கு பிரவலூா் அரசு மீன் பண்ணையில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், இதுதொடா்பான விவரங்களுக்கு சிவகங்கையில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது 04575 240848 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...