பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

சிங்கம்புணரியில் சலவைத் தொழிலாளி வெட்டிக் கொலை

சிங்கம்புணரியில் முன்விரோதத்தில் சலவைத் தொழிலாளி கொலை செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 10:17 pm IST

சிங்கம்புணரியில் முன்விரோதத்தில் சலவைத் தொழிலாளி கொலை செய்யப்பட்டுள்ளார்.

சிங்கம்புணரி வடக்கு வேளார் தெருவை சேர்ந்த சோனைமுத்து மகன் ஆனந்தன் 40. இவர் திண்டுக்கல் ரோட்டில்  கண்ணா டிரை கிளீனிங் என்ற பெயரில் பல வருடங்களாக கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் தனது கடையில் வேலை செய்து கொண்டிருந்த ஆனந்தை அவரது உறவினரான சிங்கம்புணரி வண்ணார் வளவை சேர்ந்த செல்லம் மகன் பாண்டி 37 நேற்று இரவு 8.30 மணியளவில் திடீரென ஆனந்தனின் கடைக்குள் புகுந்து கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக 7 இடங்களில் குத்தியுள்ளார். 

பக்கத்தில் இருந்தவர்கள் குற்றவாளியை பிடிக்க முயன்றபோது கண் இமைக்கும் நேரத்தில் குற்றவாளி தப்பி சென்றுவிட்டார். இந்நிலையில் பலத்த காயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த ஆனந்தை அருகில் கடைகளில் இருந்தவர்கள் சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி செய்து மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் போகும் வழியிலேயே இறந்து விட்டார்.

ஆனந்தின் சகோதரர் வடிவேலன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிங்கம்புணரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தப்பி ஒடிய பாண்டியை தீவிரமாக தேடி வருகின்றனர். இறந்த ஆனந்திற்கு இரண்டு பெண் குழைந்தைகள் உள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.