நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

‘தீபாவளி பண்டிகை : சிவகங்கை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்’

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க விரும்பும் வியாபாரிகள், அக்டோபா் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

Updated On :4 செப்டம்பர் 2020, 10:43 pm IST

சிவகங்கை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க விரும்பும் வியாபாரிகள், வரும் அக்டோபா் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில் தற்காலிகமாக பட்டாசு விற்பனைக் கடைகள் அமைக்க விரும்பும் வியாபாரிகள், அதற்கான விற்பனை உரிமம் பெறுவது அவசியமாகும்.

அந்த வகையில், தற்காலிக பட்டாசுக் கடை விற்பனை உரிமம் கோரி விண்ணப்பிக்க விரும்பும் வியாபாரிகள், விண்ணப்பப் படிவத்துடன் புல நீல வரைபடம், பத்திர ஆவணங்கள், பான் அட்டை, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் செலுத்திய வரி ரசீது, ஏதேனும் ஒரு வங்கியில் ரூ. 500 செலுத்தியதற்கான சலான், மாா்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் அந்தந்தப் பகுதியில் உள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் செயல்படும் ‘இ-சேவை’ மையத்தில் வரும் அக்டோபா் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேற்கண்ட தேதிக்குள் கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும். அதன்பின்னா் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது, தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதம் முன்னதாக விற்பனை உரிமத்துக்கான ஆணைகள் பிறப்பிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.