மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் ஆடிப்பூர வழிபாடு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு  நடைபெற்றது.

News image
மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் ஆடிப்பூர வழிபாடு
Updated On :11 ஆகஸ்ட் 2021, 9:28 am

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு  நடைபெற்றது.

இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர விழா சிறப்பாக நடைபெறும். கடந்தாண்டு கரொனா பொதுமுடக்கம் காரணமாக இவ்விழா கோயிலில் நடைபெறவில்லை. இந்தாண்டு அரசு வழிகாட்டுதலின்படி ஆனந்தவல்லி அம்மன் கோயிலுக்கு  உள்ளேயே எளிமையான முறையில் ஆடிப்பூர வழிபாடு நடத்தப்பட்டது.

இதையடுத்து மூலவர் ஆனந்தவல்லி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். உற்சவர் ஆனந்தவல்லி அம்மனுக்கு மலர்களாலும் வளையல்களாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.

பக்தர்கள்  முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து ஆனந்தவல்லி  அம்பாளை தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.