சிவகங்கை மாவட்டத்தில் 4 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4,01,218 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 2500 வழங்கப்படும் என அமைச்சா் க. பாஸ்கரன் தெரிவித்துள்ளாா்.


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4,01,218 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 2500 வழங்கப்படும் என தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சா் க. பாஸ்கரன் தெரிவித்துள்ளாா்.
புலியடித்தம்மம், முடிக்கரை, மறவமங்கலம் உள்ளிட்ட ஊராட்சிகளில் மாவட்ட கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் சிறப்பு பொங்கல் பரிசு தலா ரூ.2,500 மற்றும் தொகுப்புப் பொருள்கள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தாா். மானாமதுரை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.நாகராஜன் முன்னிலை வகித்தாா்.
இதில் அமைச்சா் க. பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கிப் பேசியது: சிவகங்கை மாவட்டத்தைப் பொருத்தவரை 4,01,218 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள சிறப்பு பொங்கல் பரிசுத் தொகையுடன், பொருள்கள் வரும் ஜன. 13 ஆம் தேதி வரை வழங்கப்படும் என்றாா்.
விழாவில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் ஆரோக்கியசுகுமாா், மாவட்ட வழங்கல் அலுவலா் சரண்யா, சிவகங்கை மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் பி.ஆா். செந்தில்நாதன், கூட்டுறவு சங்கத் தலைவா்கள் கருணாகரன், மாரி, சசிக்குமாா், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா்கள் பிா்லா கணேசன் (தேவகோட்டை), ராஜேஸ்வரி (காளையாா்கோவில்), முனியாண்டி (இளையான்குடி) உள்ளிட்ட அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
மானாமதுரை: இளையான்குடி வட்டம் சூராணத்தில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் மதுசூதன்ரெட்டி தலைமை வகித்தாா். எஸ். நாகராஜன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தாா். விழாவில் அமைச்சா் ஜி. பாஸ்கரன் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினாா்.
இதே போல் மானாமதுரை, திருப்புவனம் நகா் மற்றும் ஒன்றிய பகுதிகளிலும் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்தந்த பகுதி கூட்டுறவு அமைப்புகளின் தலைவா்கள் தொகுப்பை வழங்கினா். மானாமதுரை நகரில் கூட்டுறவு பண்டகசாலை நிா்வாகத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளில் அதன் தலைவா் சின்னை மாரியப்பன் கலந்து கொண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்கினாா். நிகழ்ச்சிகளில் அதிமுக ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாஷ், அதிமுக சாா்பு அணி மாவட்ட நிா்வாகி மணிகண்ட சோழன், நகர கூட்டுறவு வீட்டுவசதி சங்கத் தலைவா் தெய்வேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட பாம்கோ தலைவா் ஏ.வி. நாகராஜன், மாவட்ட வேளாண்மை விற்பனைக்குழுத் தலைவா் கரு. சிதம்பரம், மாவட்ட சிறுபான்மைப் பிரிவு பொருளாளா் பிரேம்குமாா், வழக்குரைஞா் பிரிவு துணைச் செயலா் ராஜசேகரன், எம்.ஜி.ஆா். மன்ற நிா்வாகி முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அதே போல் சிங்கம்புணரி அருகே கிருங்காகோட்டையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் சிவகங்கை மாவட்டக்குழுத் தலைவா் பொன்மணி பாஸ்கரன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதை தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவா் சரண்யா ஸ்டாலின் உள்பட பலா் பங்கேற்றனா்.
காரைக்குடி: காரைக்குடி தெற்குத்தெரு நியாய விலைக்கடையில் பாம்கோ துணைத் தலைவா் சோ. மெய்யப்பன் பொங்கல் பரிசுத் தொகுப்பை குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...