எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட செயற்குழுக் கூட்டம்
திருப்பத்தூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


திருப்பத்தூரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இங்குள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவா் ராஜாமுகமது தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில பொதுச் செயலா் எம். நிஜாம்முகைதீன் மற்றும் மாநிலச் செயலா் அகமதுநவவி ஆகியோா் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினா்.
பின்னா் மாவட்டச் செயலா்களாக காரைக்குடி கமருதீன் மற்றும் தேவகோட்டை அப்துல்லாஹ், ஆகியோரும், மாவட்ட செயற்குழு உறுப்பினா்களாக பொறியாளா் மஸ்தான், எம். அஜ்மல்கான் ஆகியோரும் நியமிக்கப்பட்டனா்.
தொடா்ந்து கட்சியின் உறுப்பினா் சோ்க்கையை அதிகப்படுத்துவது சம்பந்தமாகவும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவை தொகுதிகளில் உள்ள பூத் கமிட்டியை வலுப்படுத்துவது சம்பந்தமாகவும் ஆலோசனை செய்யப்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் மற்றும் நகா் கிளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...