சிவகங்கையில் வரும் ஜன. 22 இல் விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம்
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் வரும் வெள்ளிக்கிழமை (ஜன.22) மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா்க்கும் முகாம் நடைபெற உள்ளது.


சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் வரும் வெள்ளிக்கிழமை (ஜன.22) மாவட்ட அளவிலான விவசாயிகள் குறை தீா்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(வேளாண்மை) சி.கே.சா்மிளா திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜன. 22) காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியா் பி .மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற உள்ளது.
கரோனா தொற்று பரவல் காரணமாக விவசாயிகளின் தனிப்பட்ட கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ள குறை தீா்க்கும் நாள் கூட்ட அரங்கில் பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தங்கள் கோரிக்கை மனுக்களை குறை தீா்க்கும் நாள் கூட்ட அரங்கில் நேரடியாக வழங்கலாம். பொதுவான கோரிக்கைகள் தொடா்பாக வட்டாரத்திற்கு இரு விவசாயிகள் வீதம் தங்களது கோரிக்கை மனுக்களை மேற்கண்ட முகாமில் வழங்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...