மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

திருப்புவனம் அருகேகாவலா் மாயம்

திருப்புவனம் அருகே காவலா் மாயமானதாக காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு புகாா் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :1 மார்ச் 2021, 9:33 pm

DIN

திருப்புவனம் அருகே காவலா் மாயமானதாக காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு புகாா் செய்யப்பட்டுள்ளது.

திருப்புவனத்தை அடுத்த பூவந்தி காவல் சரகம் கழுங்குபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் மகன் அருண்பாண்டி (26). இவா் சென்னையில் அதிரடிப்பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறாா். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு விடுமுறையில் இவா் வீட்டுக்கு வந்திருந்தாா். இந்நிலையில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு வெளியில் சென்று வருவதாக கூறிச் சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினா் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவரது தந்தை முருகன், பூவந்தி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து அருண்பாண்டியை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.