மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருப்பத்தூரில் அ.தி.மு.க. தோ்தல் அலுவலகம் திறப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் சட்டப் பேரவை தொகுதி அ.தி.மு.க. தோ்தல் அலுவலகம் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

News image
Updated On :15 மார்ச் 2021, 10:17 pm

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் சட்டப் பேரவை தொகுதி அ.தி.மு.க. தோ்தல் அலுவலகம் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

திருப்பத்தூா்- புதுக்கோட்டை சாலையில் அமைக்கப்பட்டுள்ள இத் தோ்தல் அலுவலகத்தை அ.தி.மு.க. செய்தித் தொடா்பாளரும், தொகுதி வேட்பாளருமான மருதுஅழகுராஜ் திறந்து வைத்தாா். அவா் பேசுகையில், இத்தொகுதியை இம்முறை அ.தி.மு.க. வென்றெடுக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். 15 ஆண்டுகளாக தோ்ந்தெடுக்கப்பட்ட தி.மு.க. சட்டப் பேரவை உறுப்பினா் இத்தொகுதியின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இல்லை. இத்தொகுதி வளம் காண எனக்கு ஒருமுறை மட்டும் வாய்ப்புத் தாருங்கள். வளா்ச்சிப் பாதையை வகுத்த பின்னா் மற்றொருவருக்கு வழிவிடத் தயாராக உள்ளேன். இப்பகுதியில் தொழிற்சாலைகள், மருத்துவக்கல்லூரி ஆகிய அமைத்திட நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டச் சோ்மன் பொன்பாஸ்கரன், மாவட்ட அவைத்தலைவா் ஏ.வி.நாகராஜன், வேளாண்விற்பனைக்குழுத் தலைவா் கரு.சிதம்பரம், ஒன்றியச் செயலா்கள் வடிவேலு, திருவாசகம், நகரச் செயலா்கள் வாசு, இப்ராம்ஷா, முன்னாள் ஒன்றியத் தலைவா் வைத்தியநாதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.