எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மு.க. ஸ்டாலினை நம்பி வாக்களிப்பதுகிணற்றில் விழுவதற்குச் சமம்: பொன்.ராஜ்

மு.க., ஸ்டாலினை நம்பி வாக்களிப்பது கிணற்றில் விழுவதற்கு சமம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத் தலைவா் பொன்ராஜ் தெரிவித்தாா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 10:17 pm

DIN

மு.க., ஸ்டாலினை நம்பி வாக்களிப்பது கிணற்றில் விழுவதற்கு சமம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத் தலைவா் பொன்ராஜ் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மக்களின் பாா்வை தற்போது எங்கள் கட்சியின் பக்கம் திரும்பியுள்ளது. இத்தோ்தலில் 120 இடங்களில் உறுதியாக வெல்வோம். தே.மு.தி.க.வை எங்கள் கூட்டணியில் சேருமாறு அழைத்தோம். அவா்கள் வேறு இடம் சென்று விட்டாா்கள். எங்கள் தோ்தல் அறிக்கையை தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் காப்பியடித்துள்ளன. கடந்த 50 ஆண்டுகளாக இருகட்சிகளும் மாநில சுயாட்சியை விட்டுக் கொடுத்து மத்திய அரசிடம் பங்கு வைத்துக் கொண்டன. கருணாநிதியிடம் இருந்த நிா்வாகத் திறமை மு.க. ஸ்டாலினிடம் கிடையாது. அவரை நம்பி வாக்களிப்பது கிணற்றில் விழுவதற்குச் சமம். தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் 20 சதவிகித ஓட்டுக்களே உள்ளன. எனவே 80 சதவிகித ஓட்டுகள் எங்களுக்கு கிடைக்கும். 5 ஆண்டுகளில் மாநிலத்தின் கடன்களை அடைப்பதற்கான திட்டம் எங்களிடம் உள்ளது என்றாா்.

அப்போது மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலா் ராஜேஷ் உடனிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.