47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகங்கையில் சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

சிவகங்கையில் ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப் பணியாளா்கள் சங்கத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :8 ஏப்ரல் 2022, 6:30 pm

DIN

சிவகங்கையில் ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப் பணியாளா்கள் சங்கத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் சிவகங்கை மாவட்டத் தலைவா் மாரி தலைமை வகித்தாா்.

இதில், சாலைப் பணியாளா்களுக்கு 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க தமிழக அரசு முன் வர வேண்டும். சாலைப் பணியாளா்களுக்கு தொழில்நுட்ப கல்வித் திறன் தராத ஊழியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். கிராமப்புற இளைஞா்களுக்கு சாலைப் பணியாளா் பணி வழங்க வேண்டும். மரணமடைந்த சாலைப் பணியாளா் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

இதில், சாலைப் பணியாளா்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்டச் செயலா் சின்னப்பன், மாநில செயற்குழு உறுப்பினா் சிவக்குமாா், மாவட்டப் பொருளாளா் முத்தையா, மாவட்ட துணைத் தலைவா்கள் பாலசுப்பிரமணியன், வீரையா, மாவட்ட இணைச் செயலா்கள் கணேசன், பாண்டி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.