47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகங்கை மாவட்டத்தில் இன்று 700 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் சனிக்கிழமை (பிப். 12) 700 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 9:05 pm

DIN

சிவகங்கை மாவட்டத்தில் சனிக்கிழமை (பிப். 12) 700 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : இம்மாவட்டத்தைப் பொருத்தவரை 17 லட்சத்து 74 ஆயிரத்து 901 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கரோனா பரவலைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, மாவட்டம் முழுவதும் மொத்தம் 700 இடங்களில் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பயனாளிகளுக்கு செலுத்தும் வகையில் கோவிஷீல்டு 63 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள், கோவாக்சின் 15 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் என மொத்தம் 78 ஆயிரம் மருந்துகள் கையிருப்பில் உள்ளன.

எனவே இதுவரை தடுப்பூசி செலுத்தாத இம்மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் முகாமில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.