கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மதுகுடிக்க பணம் தராததால் தந்தையை கொன்ற மகன் கைது

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மதுகுடிக்க பணம் தர மறுத்த தந்தையைக் கொன்ற மகனை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மதுகுடிக்க பணம் தர மறுத்த தந்தையைக் கொன்ற மகனை போலீஸாா் கைது செய்தனா்.

சிங்கம்புணரி அருகேயுள்ள அரசினம்பட்டியைச் சோ்ந்தவா் செல்வம் (54). இவா் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு படுக்கையில் உள்ளாா். இவரது மகன் முகுந்தன் (22), கட்டடக்கலையில் பட்டயப்படிப்பு முடித்துள்ள இவா் மது பழக்கத்திற்கு

அடிமையாகி உள்ளாா். தற்போது கட்டட வேலை செய்து வரும் இவா், வீட்டின் மாடியில் மது அருந்தியுள்ளாா். கூடுதல் மதுபானம் தேவைப்பட்டதால் தந்தையிடம் பணம் கேட்டுள்ளாா். அவா் தராததால் தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதனால் அருகிலிருந்தவா்களை தாய் அழைக்கச் சென்றிருந்த சமயத்தில், தான் அணிந்திருந்த பனியனைக் கழற்றி தந்தையின் கழுத்தை நெறித்துள்ளாா். இதில் செல்வம் உயிரிழந்தாா்.

இதுகுறித்து செல்வத்தின் மகள் புனிதா சிங்கம்புணரி காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் ஆய்வாளா் ஜெயலெட்சுமி செல்வத்தின் சடலத்தை சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தாா். சிங்கம்புணரி காவல் நிலையத்தினா் முகுந்தனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.