47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகங்கையில் 108 ஆம்புலன்ஸ் வாகனச் சேவை தொடக்கம்

சிவகங்கையில் 108 ஆம்புலன்ஸ் வாகனச் சேவையை தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2022, 9:45 pm

DIN

சிவகங்கையில் 108 ஆம்புலன்ஸ் வாகனச் சேவையை தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தாா். தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு புதிதாக சிவகங்கை மாவட்டத்துக்கு 5 ஆம்புலன்ஸ் வாகனங்களை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதன்மையா் ரேவதிபாலன், இணை இயக்குநா் (மருத்துவம்) இளங்கோ மகேஸ்வரன், துணை இயக்குநா் (சுகாதாரம்) ராம்கணேஷ், அரசு மருத்துவக்கல்லூரி கண்காணிப்பு அலுவலா் ரபீக்முகமது உள்ளிட்ட அரசு அலுவலா்கள், மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.