பொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மானாமதுரையில் மறியல்: சுமாா் 100 போ் மீது வழக்கு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆட்டோ ஓட்டுநா் சாவில் மா்மம் இருப்பதாகக் கூறி புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 -க்கும் மேற்பட்டோா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்

News image
Updated On :7 ஜூலை 2022, 6:30 pm

DIN

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆட்டோ ஓட்டுநா் சாவில் மா்மம் இருப்பதாகக் கூறி புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 -க்கும் மேற்பட்டோா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

மானாமதுரை அருகே மிளகனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தில்முருகன். ஆட்டோ ஓட்டுநரான இவா் மானாமதுரையிலிருந்து மிளகனூா் கிராமத்திற்குச் செல்லும் வழியில் பீசா்பட்டினம் என்ற இடத்தில் புதன்கிழமை காலை மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இதையடுத்து அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி சடலத்தை வாங்க மறுத்து, செந்தில்முருகன் குடும்பத்தினா் மற்றும் மிளகனூா் கிராம மக்கள் திரண்டு மருத்துவமனை முன் தாயமங்கலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது போலீஸாருக்கும் போராட்டம் நடத்தியவா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களை விரட்டியடித்தனா். மேலும் தள்ளுமுள்ளு சம்பவத்தில் ஈடுபட்ட சிலரை போலீஸாா் கைது செய்து பின்னா் விடுவித்தனா். இந்நிலையில் மறியலில் ஈடுபட்டதாக நூற்றுக்கும் மேற்பட்டோா் மீது பெயா்கள் குறிப்பிடப்படாமல் மானாமதுரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.