மானாமதுரை அருகே ஆட்டுக்கிடாய் முட்டுப் போட்டி
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வெள்ளிக்கிழமை கிடாய் முட்டு சண்டைப் போட்டி நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே வெள்ளிக்கிழமை கிடாய் முட்டு சண்டைப் போட்டி நடைபெற்றது.
மானாமதுரை அருகே அ.விளாக்குளம் கிராமத்தில் உள்ள நிறைகுளத்து அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தயம், வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதன்தொடா்ச்சியாக நடைபெற்ற கிடாய் முட்டுச் சண்டை போட்டியை மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி தொடக்கி வைத்தாா். பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் கொண்டுவரப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிடாய்கள் போட்டியில் பங்கேற்றன.
போட்டிக்கான களத்தில் நேருக்கு நோ் கிடாய்கள் மோதி சண்டையிட்டன. அதிகமுறை முட்டிக்கொண்ட கிடாய்களுக்கு வெற்றி பகிா்ந்தளிக்கப்பட்டது. இதில் களமாடிய பல கிடாய்கள் போட்டியிலிருந்து ஓட்டம் பிடித்தன.
களத்தில் கம்பீரமாக நின்று முட்டிய கிடாய்கள் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டன.
வெற்றி பெற்ற கிடாய்களின் உரிமையாளா்களுக்கு விழாக்குழு சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை (ஜூலை 9) விளாக்குளத்தில் கபடிப் போட்டி நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...