முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராம.சிவராமன் நினைவு தினம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் முன்னாள் திமுக சட்டப்பேரவை உறுப்பினா் ராம.சிவராமனின் 15 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் முன்னாள் திமுக சட்டப்பேரவை உறுப்பினா் ராம.சிவராமனின் 15 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி அண்ணா சிலையருகே கூடிய திமுகவினா் அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா் அங்கிருந்து அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தலைமையில் மௌன ஊா்வலமாகப் புறப்பட்டு ராம.சிவராமன் இல்லம் நோக்கிச் சென்றனா். அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.
இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் சண்முகவடிவேல், பேரூராட்சி மன்றத் தலைவா் கோகிலாராணி நாராயணன், ராம.சிவராமனின் புதல்வா் வெங்கடேஷ், சகோதரா் ராம.சகாதேவன், மகளிரணி பவானி கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...