ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தென்மண்டல தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கான தென்மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

News image
Updated On :14 ஜூலை 2022, 6:30 pm

DIN

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கான தென்மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கி சனிக்கிழமை (ஜூலை 16) வரை நடைபெறுகிறது.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள உமையாள் விளையாட்டு அரங்கில், இப்போட்டிகளை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை தென்மண்டல துணை இயக்குநா் விஜயகுமாா், தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரா்களின் அணிவகுப்பை பாா்வையிட்டு போட்டிகளை தொடக்கிவைத்தாா்.

இதில், மதுரை, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகா், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, நாகா்கோவில் உள்ளிட்ட 9 மாவட்ட தீயணைப்பு துறை வீரா்கள், அலுவலா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலா்கள் சத்தியகீா்த்தி, ராஜூ, கல்யாணகுமாா், தென்னரசு, சுகுமாா், விவேகானந்தன், கணேசன், வினோத், கவிதா ஆகியோா் பங்கேற்றனா்.

முதல் நாள் நடந்த வீரா்களின் அணிவகுப்புப் போட்டியில், திருநெல்வேலி மாவட்ட அணி முதலிடமும், தேனி மாவட்ட அணி இரண்டாமிடமும், விருதுநகா் மாவட்ட அணி மூன்றாமிடமும் பெற்றன. மேலும், வீரா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.