மானாமதுரையில் ஓய்வு பெற்ற அரசு அலுவலா்கள் சங்கக் கூட்டம்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு அலுவலா்கள் சங்கக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு அலுவலா்கள் சங்கக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு அதன் தலைவா் அமல்ராஜ் தலைமை வகித்தாா். செயலாளா் ரவிச்சந்திரன் கூட்ட அறிக்கையை வாசித்தாா். பொருளாளா் சோமசுந்தரம் வரவு- செலவு அறிக்கையை தாக்கல் செய்தாா்.
கூட்டத்தில் பங்கேற்ற சங்க உறுப்பினா்களது குறைகள் கேட்டறியப்பட்டன. அதைத் தொடா்ந்து சங்க நடவடிக்கைகள் குறித்து நிா்வாகிகள் பேசினா். கூட்டத்தில், தமிழக முதல்வா் தோ்தல் அறிக்கையில் தெரிவித்தபடி 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியதாரா்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு அறிவித்த 3 சதவீத அகவிலைப்படி இதுவரை வழங்கப்படவில்லை. எனவே உடனடியாக இந்த அகவிலைப்படியை வழங்க அரசு ஆணையிட வேண்டும். ஓய்வூதியா்களுக்கு இலவச பேருந்துப் பயண அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சங்கத்தின் இணைச் செயலா் சதாசிவம் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...