திருப்புவனத்தில் விஷ வண்டுகள் கடித்து வியாபாரி பலி
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் புதன்கிழமை இரவு விஷ வண்டுகள் கடித்து அரிசி வியாபாரி உயிரிழந்தாா்.


சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் புதன்கிழமை இரவு விஷ வண்டுகள் கடித்து அரிசி வியாபாரி உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம் அங்காடிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் அரிசி வியாபாரி அப்துல் ரஹீம் (42). இவா் திருப்புவனம் வந்துவிட்டு ஊருக்குச் செல்வதற்காக மடப்புரம் விலக்குப் பகுதியில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, திருப்புவனம் மடப்புரம் பகுதியை இணைக்கும் வைகை ஆற்றுப் பாலத்தின் கீழ் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகள் பறந்து வந்து கடித்ததில் மயங்கி விழுந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூ றப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினா் இரவோடு இரவாக பாலத்தின் கீழ் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளை தீ வைத்து அழித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...